கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்

கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் அரவிந்த் என்பவர் படுகாயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பு வழங்க வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி