அதன்படி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் வர்ணம் பூசப்பட்டு பொலிவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு மேல் நான்காம் கால வேள்வி, மூலிகை பொருட்கள் வேள்வி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 10:15 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற போது பக்தர்கள் 'அரோகரா, அரோகரா' என்று கோஷமிட்டு முருகன் பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். விழாவுக்கு, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமிகள், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்