மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு கடந்த மே 3ம் தேதி கோத்தகிரியில் கோடைவிழாவின் முதல் நிகழ்ச்சியாக 13வது காய்கறி கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று கூடலூரில் 11வது வாசனை திரவிய கண்காட்சி துவங்கியது. இந்த வாசனை திரவிய கண்காட்சியை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியானது இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வாசனை திரவிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏலக்காய் கிராம்பு, சோம்பு, சீரகம் போன்ற வாசனை திரவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.