ஊட்டி: மலைப்பாதையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் நடமாட்டம்

கூடலூர்–ஊட்டி தேசிய மலைப்பாதையில் 2 நாட்களாக குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கூடலூர் பகுதியில் யானைகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் வருவது வழக்கமாக இருந்தாலும், சமீப காலமாக நகரின் முக்கிய சாலைகளிலும் இவை நடமாடுவது அதிகரித்துள்ளது. மலைப்பாதையில் யானைகள் நடமாடுவதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி