ஊட்டி: காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு – மசினகுடி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் சாலைகளை கடப்பதால், வாகனங்களை விரட்டும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால் வனத்துறை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சாலையோர நிறுத்தத்துக்குத் தடை விதித்து, வாகன ஓட்டிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி