ஊட்டி: மலைப்பாதையில் சன் ரூப் திறந்து ஆபத்தான பயணம்

சமீப காலமாக ஊட்டி மலைப்பாதைகளில் பயணம் செய்யும் சிலர் கார்களின் சன் ரூப்பை திறந்து அதில் நின்றபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. அதிக வளைவுகள் மற்றும் செங்குத்தான சாலைகள் கொண்ட மலைப்பாதைகளில் இது விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. வனப்பகுதிகளில் மரக்கிளைகள் மோதி காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. இது பிற வாகன ஓட்டிகளுக்கும் கவனச்சிதறலை ஏற்படுத்தும் என்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி