ஊட்டி: கடும் குளிரால் மோப்பநாய் உயிரிழப்பு - அஞ்சலி

கூடலூர் வனக்கோட்டத்தில் பணியாற்றிய சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த அதவை என்ற 7 வயது மோப்பநாய், உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தது. வனக் குற்றங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டறிவதில் உதவிய அதவை, கடும் குளிரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், "வெப்பமான பகுதிக்கு ஏற்ற இனமாக இருப்பதால் குளிரை தாங்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் குளிர் நிலைக்கு ஏற்ற மோப்பநாய்கள் கொண்டு வரப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்தி