ஊட்டி: சாலையோர வியாபாரி தம்பதியினர் தர்ணா

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரி தம்பதியினர் நேற்று (மே 20) தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், ஏழைகளுக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதி என பாரபட்சம் காட்டுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி