நீலகிரி: சிறைக்கு சென்று காத்திருந்த காதலன்; ஏமாற்றிய காதலி.. பரபரப்பு

நீலகிரி மாவட்டம், ஊட்டி அன்பு அண்ணா காலனியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் (வயது 24). தொழிலாளியான இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்த நிலையில், அவர் காதலித்து திருமணம் செய்த சிறுமி, 18 வயதை தாண்டிய நிலையில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் மனவேதனை அடைந்த பன்னீர்செல்வம் கடந்த 7-ம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி