கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றது. அப்போது நாயை காப்பாற்ற முயன்ற ஒருவரை சிறுத்தை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த நபர் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறுத்தையை பிடித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.