நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால், குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சின்ன வண்டிச்சோலை, குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதை, வண்டிச்சோலை–பெள்ளட்டி மட்டம் போன்ற இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.