ஊட்டி: வீடு வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி

ஊட்டியில், வீடு வாங்கித் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக ஷாயின்ஷா என்ற புரோக்கரை போலீசார் கைது செய்துள்ளனர். நொண்டிமேட்டை சேர்ந்த ஷாயின்ஷா, ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த இக்பால் கான் என்பவரிடம் இருந்து வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ. 5 லட்சம் பெற்றதாகவும், வீடு வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. ஒரே வீட்டை பலருக்கு காட்டி பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி