நேற்று ஊட்டி லவ்டேல் பகுதியில், சாருகேஷ் (21) மற்றும் நாகராஜ் (20) ஆகியோர் பயணம் செய்த கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சாருகேஷ் ஊட்டி அரசு மருத்துவமனையிலும், நாகராஜ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து ஊட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.