நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா பகுதியைச் சேர்ந்த நாகியம்மாள் (69) என்பவர் நேற்று மாடுகளை மேய்க்கச் சென்றபோது, புலி கவ்விச் சென்றது. வனத்துறை, போலீசார் மற்றும் பொதுமக்கள் தேடுதல் நடத்தியதில், நாகியம்மாள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புலியைப் பிடிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.