உதகையில் குரூஸ் (20) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் உதகை மத்திய காவல் நிலைய காவலர் நசீர் அகமது தொடர்புடையவர் என தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாக எருமாடு காவல் நிலையத்தைச் சேர்ந்த அபிசேகரன், கோத்தகிரி காவல் நிலையத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன், மசினகுடி காவல் நிலையத்தைச் சேர்ந்த சாந்தகுமார் ஆகிய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.