ஊட்டி: 12 வயது சிறுமி கடத்தல்; வாலிபர் கைது

குன்னூர் அருகே 12 வயது பள்ளி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். திருமணம் செய்வதாக கூறி 30 வயது நபர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. கூடலூர் பகுதியில் இருந்து சிறுமி மீட்கப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி