இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்குத் தகவல் அளித்தும் காட்டு யானையை விரட்டி ஜோஸ் ஆண்டனியை யானையிடமிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் உடல் கைப்பற்றப்பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.