நாடு முழுவதும் 77-வது குடியரசு தினம் வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மில்லிகுன்னு கிராமத்தைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளி இந்திராணிக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அழைப்பு கடிதம் வந்துள்ளது. தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திராணிக்கு தபால்காரர்கள் நேரில் சென்று கடிதத்தை வழங்கினர். அழைப்பை பெற்ற இந்திராணி மகிழ்ச்சி அடைந்தார்.