மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் கோழிபஜார் முதல் நாகம்பள்ளி வரை ரூ. 76.52 லட்சம் மதிப்பீட்டில் 1.60 கி.மீ தூரம் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆ. ராசா திறந்து வைத்தார். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு முதுமலை மற்றும் செம்பக்கொல்லி பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கவுசிக், கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, ஆர்.டி.ஓ. செந்தில்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், சலீம், திமுக ஒன்றிய செயலாளர் லியாகத் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.