நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலி கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தையை வனத்துறையினர் தற்காலிக மயக்க ஊசி செலுத்தி பாதுகாப்பாக மீட்டனர். தோட்ட தொழிலாளர்கள் தகவல் அளித்ததும், வனத்துறை குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவர்கள் சிறுத்தைக்கு பரிசோதனை மேற்கொண்டதில் பெரிய அளவில் காயங்கள் இல்லை எனத் தெரிவித்தனர். முதலுதவி அளிக்கப்பட்ட சிறுத்தை, கண்காணிப்புக்குப் பிறகு வனப்பகுதியில் விடப்படும்.