நீலகிரி: சிறுத்தை குட்டிகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், பந்தலூரில் உள்ள தனியார் தோட்டப் பகுதியில், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சாலையில், தாயுடன் சாலையை கடக்க முயன்ற இரண்டு சிறுத்தை குட்டிகள், வேகமாக வந்த வாகனத்தில் மோதி உயிரிழந்தன. வனச்சரகர் சஞ்சீவி, வனவர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டதில் இந்த தகவல் தெரியவந்தது. வனத்துறையினர், விலங்குகள் அதிகம் உலா வரும் சாலைகளில் வாகனங்களை மித வேகத்தில் இயக்க அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தை குட்டிகள் மீது மோதிய வாகனத்தை கண்டறிந்து, ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி