நீலகிரி: 72-வது கூட்டுறவு வார விழா தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் 'தன்னிறைவிற்கான கருவிகளாக கூட்டுறவு சங்கங்கள்' என்ற மையக் கருத்துடன் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பவ்யா, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு விழாவைத் துவக்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் சித்ரா தலைமையில் கூட்டுறவு கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி