இதில் ஒரு பகுதியாக குன்னூர் அருகே உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்ஆர்சி) சார்பில் இன்று காலை 7 மணிக்கு தங்கராஜ் நினைவு மைதானத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவிற்கு தனுஷ்ரீ தாஸ் தலைமை வகித்தார். இதில் ஜும்பா நடனத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில் சிறுமிகள் முதல் 45 வயது உள்ள பெண்களுக்கான நடை மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஐந்து கிலோமீட்டர் வரை நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் தங்கராஜ் நினைவு மைதானத்தில் தொடங்கி பிளாக் பிரிட்ஜ், சப்ளை டிப்போ, மினி படகு இல்லம், பேரக்ஸ், ராணுவ மருத்துவமனை வழியாக 5 கிலோமீட்டர் தூரத்தை நடந்து பிறகு தங்கராஜ் மைதானம் வந்தடைந்தனர். முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்