இந்த சம்பவம் குறித்து பேசிய பகுதி மக்கள் கல்லாம்பாளையம் பகுதியில் பாலம் இல்லாததால் வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு சிறிய பாலம் கட்டினால் இந்த சம்பவத்தைத் தடுக்க முடியும் என வேதனை தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சோலூர் மட்டம் போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இறந்த லட்சுமிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது தங்கையைப் பார்க்க சென்ற இவர், காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.