நேற்று இரவு, கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் சிறுத்தை ஒன்று நுழைந்தது. அங்கு இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றது. ஆனால், நாய் இரும்பு கூண்டுக்குள் இருந்ததால் சிறுத்தை ஏமாற்றமடைந்தது. பின்னர், மாடிப்படி வழியாக ஏறி நீண்ட நேரம் வீட்டு வளாகத்திலேயே சுற்றித் திரிந்தது. பிறகு, அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. இந்தக் காட்சிகள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. சிறுத்தையின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், குடியிருப்புகளில் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசியலில் தனித்துவ முத்திரை பதித்த ராமதாஸ்