கோத்தகிரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாத்தாவுக்கு 5 ஆண்டுகள் சிறை

கோத்தகிரியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது சின்ன தாத்தாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியின் தாத்தாவின் தம்பியான 60 வயது முதியவர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி