வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். உடல் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், நுங்கு போன்றவற்றை மக்கள் நாடி வருகின்றனர். வெளியூர் வியாபாரிகள் சமவெளிப் பகுதிகளில் இருந்து நுங்கு மற்றும் பதநீரை கொண்டு வந்து சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். மூன்று நுங்கு 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால் விலையை உயர்த்தியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்த வெயில் தாக்கத்தால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.