கூடலூர்: சிறுத்தை தாக்கி உயிர் தப்பிய விவசாயி

கூடலூர் அருகே புளியம்பாறா–கரளிக்கண்டி பகுதியில் நேற்று 43 வயதான விவசாயி சேகர் மீது சிறுத்தை தாக்கியது. விளைநிலத்திலிருந்து வீடு திரும்பியபோது புதரில் இருந்து பாய்ந்த சிறுத்தை அவரது காலில் கடித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த சேகர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளி சத்தம் எழுப்பியதால் சிறுத்தை ஓடியதாக தகவல்.

தொடர்புடைய செய்தி