கூடலூர்: சிறுத்தை தாக்குதல்; 6 ஆடுகள் பலி

கூடலூர், பாடந்துறை கருக்கபாளி பகுதியில் நேற்று (டிசம்பர் 29) இரவு சிறுத்தை தாக்கி ஆறு ஆடுகளை கொன்ற சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ராம் உண்ணி என்பவர் வளர்த்த ஆடுகள் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலையில் கொட்டகை உடைக்கப்பட்டு ஆடுகள் கொல்லப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு ஆடு காணாமல் போயிருந்தது. 

இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில், சிறுத்தையின் தாக்குதலால் ஆடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. வனத்துறையினர், இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிறுத்தை மனிதர்களையும் தாக்கும் அபாயம் உள்ளதால், வனத்துறை கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இறந்த ஆடுகளுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி