நீலகிரி காபிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால், காபி விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். காபி கொட்டை கிலோ 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், கோடை மழை பெய்தால் பூக்கள் காயாக மாறி நல்ல விளைச்சல் கொடுக்கும். நடப்பாண்டு நல்ல விலை கொடுப்பதால், மழை பெய்தால் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.