நீலகிரி: பிடிபட்ட 10 அடி நீளமுள்ள கருநாகம்

கேரள எல்லையில் தக்ஷிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட அஜ்ஜவரா கிராமப்புறத்தில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும், கேரள வனத்துறைக்கு உட்பட்ட ரப்பர் மரங்களில் பால் எடுத்து தினக்கூலிக்கு வேலை செய்து வருகின்றனர். தினமும் காலை 5 மணிக்கு வேலைக்குச் செல்வது வழக்கம். அதே போல், நேற்று (ஆகஸ்ட் 1) வேலை செய்வதற்காகக் கவிதா என்ற பெண் சென்றபோது, அங்கு சுமார் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்ததைக் கண்டு அலறி அடித்து ஓடினார். அதற்குப் பின் அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். பின்னர் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கோபால் என்ற பாம்பு பிடிப்பவர் பாம்பினைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டார்.

தொடர்புடைய செய்தி