ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா.. 4 பேர் கைது

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அஜய், இமானுவேல்பெலிக்ஸ், அரவிந்த், ஜோஸ்வா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து குன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் குறிப்பாக மாணவர்களுக்கு அதிகளவில் கஞ்சா சப்ளை செய்தது வந்ததும் தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி