நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை சோலூர், கோக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சுற்றி திரிந்த நிலையில், இன்று பழங்குடியின மக்கள் வாழும் பகல்கோடு மந்து மற்றும் 9வது மயில் பகுதியில் உலா வந்தது.
பகல் கோடு மந்து பகுதியில் காப்புகாட்டை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்தின் அருகே உலா வந்த காட்டு யானை விளைநிலங்களை சேதப்படுத்தி பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.