மேல்கம்மநல்லி கிராமத்தின் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் தங்கள் வாகனங்களில், பள்ளிக்கு அழைத்து சென்று வருகின்றனர். புலி நடமாட்டம் குறித்து, வனத்துறை சார்பில், நேற்று காலை முதல் ஒலிபெருக்கியில், பொது மக்களுக்கு அறிவிப்பு செய்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள முட்புதர்களை வன ஊழியர்கள், பொக்லைன் உதவியுடன் அகற்றி வருகின்றனர். புலி நடமாட்டம் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முட்புதர்கள் அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தானியங்கி கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகவில்லை. பொதுமக்கள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு