இந்நிலையில் வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள், மற்றும் யானை விரட்டும் குழுவினர் உதவியுடன் கடந்த 28 நாட்களுக்கும் மேலாக காட்டு யானையை அதிநவீன ட்ரோன் கேமராக்களைக் கொண்டு கண்காணித்தும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் உதகையிலிருந்து இடம்பெயர்ந்து எமரால்டு வழியாக குந்தா பகுதிக்கு உலா வந்ததால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உதவியுடன் காட்டு யானையை கண்காணித்தும் மஞ்சூரிலிருந்து யானைகளின் புகலிடமாகத் திகழும் கெத்தை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மஞ்சூர் பகுதியில் உலா வந்த காட்டு யானையைக் கண்டு காட்டெருமை கூட்டம் அலறி அடித்து ஓட்டம் பிடித்தது.