மாவட்ட அவைத் தலைவர் போஜன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிகுமார், மாவட்டப் பொருளாளர் நாசர் அலி, பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார், உதகை நகரமன்றத் தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக "தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்" என கோஷமிட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், மஞ்சுநாத், சசிகுமார், உதகை நகர துணைச் செயலாளர் கிருஷ்ணன், நகரமன்ற உறுப்பினர் விஷ்ணு, கழக நிர்வாகிகள் செல்வம், சுரேஷ், உமேஷ், வாசுதேவன், நிக்கோலஸ், ஸ்டீபன், கமல், செந்தில், சிவகுமார், சம்பத், செல்வராஜ் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.