குன்னூர் அருகே சேம்பக்கரை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் விஜயகுமார் (33) என்ற பழங்குடியின இளைஞர் நேற்று (மார்ச் 10) உயிரிழந்தார். தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்த அவர், நேற்று இரவு வனப்பகுதி வழியாக வீடு திரும்பும்போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. வனத்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.