நீலகிரியில் தொடர் மழை: குளுகுளு காலநிலை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. தொடர்ச்சியான மழையால் சாலைகளில் நீர் தேங்கியதுடன், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சுற்றுலா பயணிகள் மழையை ரசித்தபடி இயற்கை அழகை கண்டு மகிழ்ந்தனர். அதிகாரிகள் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி