நீலகிரி : வளர்ப்பு பிராணியை காப்போம்; பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார். 

நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையம் முகப்பு பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார். 

பேரணியில் வளர்ப்பு பிராணிகளை காத்திட வேண்டும், துன்புறுத்தக் கூடாது எனவும் கோஷங்களை எழுப்பினர். இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா, நகராட்சி ஆணையாளர், போக்குவரத்து அலுவலர்கள் என அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி