கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பசுந்தேயிலை பறித்துக் கொண்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்த தேவி (60) என்ற பெண் தொழிலாளியை கரடி தாக்கி காயப்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் கூட்டகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோத்தகிரி வனத்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மருத்துவச் செலவிற்கான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.