புர்க்கோலி விலை கிடுகிடு உயர்வு

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் முதுகெலும்பாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீன்ஸ் மற்றும் சைனீஸ் காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. இங்கு விளைவிக்கக் கூடிய மழைத் தோட்ட காய்கறிகள் உதகை மார்க்கெட் சந்தைக்கும், மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கும் எடுத்துச்செல்லப்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உதகை மார்க்கெட் சந்தையில் இங்கிலீஷ் காய்கறிகளான புர்க்கோலி கடந்த வாரம் விலை 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை ஆனதால் வேதனையில் இருந்த விவசாயிகள் தற்போது உதகை மார்க்கெட் சந்தையில் 250 முதல் 300 ரூபாய் வரை விற்பனை ஆவதால் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி