நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 29.2 செமீ மழையும், அப்பர் பவானியில் 16.8 செமீ மழையும், பார்சன்ஸ்வேலியில் 13.2 செமீ மழையும், பந்தலூரில் 13 செமீ மழையும், சேரங்கோட்டில் 11.8 செமீ மழையும், போர்த்திமந்து பகுதியில் 9.4 செமீ மழையும், எமரால்டில் 5.7 செமீ மழையும், தேவலாவில் 5.2 செமீ மழையும், உதகையில் 1.6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 1371 மிமீ மழையும், சராசரியாக 47.38 செமீ மழையும் பதிவாகியுள்ளது.