கூடலூர்: காட்டு யானை தாக்கி பெண் பலி.. வெளியான புகைப்படம்

கூடலூர் அருகே பாண்டியாறு–புன்னம்புழா ஆற்றில் மீன் பிடிக்க சென்ற ஆதிவாசி பெண் மீனாட்சி (50) காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். தேவாலா அட்டி தேக்கம்பாடியைச் சேர்ந்த இவர், கணவர் மற்றும் உறவினருடன் தனியார் எஸ்டேட் பகுதியில் மீன் பிடித்துவிட்டு திரும்பியபோது, பலா மரம் அருகே மறைந்திருந்த காட்டு யானை திடீரென தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனத்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி