அப்போது கூடலூர் பாடந்தொரை அருகே நான்காவது மைலில் பகுதியில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா மினி பேருந்து சாலையின் எதிரே உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த அவ்வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பேருந்து விபத்தில் சிக்கிய 17 பேரையும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், விபத்தில் சிறு காயமடைந்த ஓட்டுனர் உட்பட 15 பேர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் விபத்து குறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக கூடலூரிலிருந்து கேரள மாநிலம் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.