மேலும் 20 பழங்குடியினர் மக்களுக்கு பிஎம்ஜெய் திட்டத்தின் கீழ் 1.14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆவணங்களை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ராசா இதில் திட்ட இயக்குநர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை இணைச் செயலாளர் வினித், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவியர், தண்ணீர் வாரியம் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நீலகிரி மாவட்டத்தில் குறைகள் ஒன்றும் இல்லாத அளவுக்கு 95 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் எதிர்வரும் மழைக்கு முன்னால் முடிக்கப்படும் எனவும், குடிநீர் திட்டம் விரைவில் முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் அறிவித்த சிறப்புத் திட்டங்களை ஆய்வு செய்ததில் குறை ஏதும் இல்லை எனவும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு