நீலகிரி: உலா வரும் ஒற்றை கரடி; பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த புதுமந்து பகுதிக்குள் வனவிலங்குகள் நாளுக்கு நாள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்து வளர்ப்பு விலங்குகளையும் நாய் மற்றும் பூனையை வேட்டையாடி செல்வது தொடர்கதையாகி வருகிறது. 

இந்த நிலையில் புதுமந்து பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்பு அருகில் முகாமிட்டு பொதுமக்களை பெரும் அச்சம் அடைய செய்கின்றன. குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டில் வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி