உதகை: ஜிபிஎஸ் கருவியுடன் வந்த பிணந்தின்னி கழுகு

உதகையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பிணந்தின்னி கழுகு ஒன்று முகாமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. கழுகின் தோளில் ஜிபிஎஸ் கருவியும், கால்களில் எண்கள் கொண்ட அடையாள ஸ்டிக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின்படி, நேற்று இரவு வந்த கழுகு இன்று காலை சிறிது நேரம் பறந்து சென்ற பின்னர், மீண்டும் முதலில் அமர்ந்த அதே இடத்திற்கே திரும்பி அங்கேயே தொடர்ந்து அமர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி