உதகையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்தில் உயிர் காக்கும் மருந்துகளை கண்டுபிடிப்பது குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கில் இந்தியா பார்மசி கவுன்சில் முன்னாள் தலைவரும், JSS பல்கலைக்கழக துணைவேந்தருமான தகவல்.ஜெ. எஸ். எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் மருந்து வேதியியல் துறையின் சார்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 22 மாநிலங்களில் இருந்து 1200 ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இதில் 750 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதுவரை ஒரு புதிய மருந்தை கண்டுபிடிக்க 2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சுமார் 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், AI தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள்ளேயே புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும், புற்றுநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற வாழ்நாள் நோய்களில் இருந்து விடுதலை பெற அளவில் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் மூத்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.