தொடர்ந்து இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அத்துடன் அந்த காயம் அடைந்த 3 பேருக்கும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இவர்களில் சரிதா என்ற இளம்பெண் மட்டும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அனுமதிக்கப்பட்டு இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த தகவல் அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்ப ட்டது. இதையடுத்து ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் சரிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.