நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆக்ரோஷமாக இரு காட்டு எருமைகள் மோதிக்கொண்டது அருகில் இருந்த வாகனங்களையும் சேதப்படுத்தும் வைரல் வீடியோ. நீலகிரி மாவட்டத்தில் காட்டு எருமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் சுற்றித் திரிவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள பேரக்ஸ் பகுதியில் இரு ஆண் காட்டு எருமைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகனத்தையும் காட்டெருமை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.